மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்திற்கான தரச் சான்றிதழை கட்டாயமாக்க நடவடிக்கை

மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்திற்கான தரச் சான்றிதழை கட்டாயமாக்க நடவடிக்கை

மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்திற்கான தரச் சான்றிதழை கட்டாயமாக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2016 | 9:14 am

மோட்டார் சைக்கிள் த​லைக்கவசத்திற்கான தரச்சான்றிதழை கட்டாயமாக்குவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பொருட்டு கடந்த வருடத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் சமந்தா கருணாரத்ன குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம் உள்ளூரில் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும், விநியோகிக்கப்படும் மற்றும் களஞ்சியப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு இலங்கையின் தர நிர்ணய இலட்சினை பொறிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தர நிர்ணய இலட்சினை பொறிக்கப்படாமல் தலைக்கவசங்களை தயாரித்தல், மொத்தமாகவோ அல்லது சில்லரையாகவோ விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல் என்பன குற்றமாக கருதப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்