மக்கள் சக்தி 100 நாட்கள்: பண்டாரவளை மற்றும் பொலன்னறுவையில் இரண்டு திட்டங்கள் ஆரம்பம்

மக்கள் சக்தி 100 நாட்கள்: பண்டாரவளை மற்றும் பொலன்னறுவையில் இரண்டு திட்டங்கள் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2016 | 10:04 pm

நீரூற்றுக்கள் பாயும் எழில்மிகு மலையகத்தில், உமா ஓயா திட்டம் காரணமாக நீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் பண்டாரவளை, எகொடகம பகுதி மக்கள்.

துன்புறும் மக்களின் அவலம் போக்குவதற்காக, ”மக்கள் சக்தி, 100 நாட்கள்” திட்டத்தின் கீழ், இன்று புதிய திட்டமொன்றுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இதேவேளை, நியூஸ்பெஸ்ட்டின் மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் கீழ், பொலன்னறுவை, அத்தனகடவல மஹசேன் வித்தியாலயத்தில் சேதமடைந்துள்ள கட்டடத்தைப் புனரமைக்கும் திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்