நாட்டின் பல பகுதிகளில் உரத்தட்டுப்பாடு

நாட்டின் பல பகுதிகளில் உரத்தட்டுப்பாடு

நாட்டின் பல பகுதிகளில் உரத்தட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2016 | 10:32 am

நாட்டில் பல பகுதிகளிலும் உரத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை கமநல சேவைகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

குருநாகல், பதுளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் உரத்திற்கு அதிக தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை கமநல சேவைகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன கூறினார்.

உரிய காலப்பகுதியில் உரம் கிடைக்காமையால் செய்கைகள் மூலம் எதிர்ப்பார்க்கப்பட்ட அறுவடையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

உரத்திற்கு தட்டுப்பாடு நிலவுவது தொடர்பில் தமக்கு இதுவரை பதிவாகவில்லை என்றும், அவ்வாறாயின் அதுகுறித்து அருகிலுள்ள கமநல சேவைகள் நிலையத்திற்கு அறிவிக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் உரத்தை பதுக்கிவைத்தல் மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முறைப்பாடு செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்