தொடர் வறட்சியால் பம்பரகந்த நீர்வீழ்ச்சியின் நீர் மட்டம் குறையும் அபாயம்

தொடர் வறட்சியால் பம்பரகந்த நீர்வீழ்ச்சியின் நீர் மட்டம் குறையும் அபாயம்

தொடர் வறட்சியால் பம்பரகந்த நீர்வீழ்ச்சியின் நீர் மட்டம் குறையும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2016 | 1:10 pm

பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் வறட்சி காரணமாக அங்குள்ள நீர் வீழ்ச்சிகள் மற்றும் நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைவடந்து வருகின்றது.

இலங்கையின் மிக உயரமான நீர் வீழ்ச்சியான பம்பரகந்த நீர்வீழ்ச்சியும் பதுளை மாவட்டத்திலேயே அமைந்துள்ளது.

இந்த பிரதேசத்தில் நிலவி வரும் தொடர் வறட்சி காரணமாக பம்பரகந்த நீர் வீழ்ச்சியும் நீரை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பம்பரகந்த நீர் வீழ்ச்சியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் உள்ள ஏனைய நீர் நிலைகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகின்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக இந்த பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவடைந்து வருகின்றதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்