ஜானி டெப்பிடமிருந்து  ஜீவனாம்சமாகக் கிடைத்த 7 மில்லியன் டொலர்களை அறக்கொடைக்கு வழங்கும் அம்பர் ஹேர்ட்

ஜானி டெப்பிடமிருந்து  ஜீவனாம்சமாகக் கிடைத்த 7 மில்லியன் டொலர்களை அறக்கொடைக்கு வழங்கும் அம்பர் ஹேர்ட்

ஜானி டெப்பிடமிருந்து  ஜீவனாம்சமாகக் கிடைத்த 7 மில்லியன் டொலர்களை அறக்கொடைக்கு வழங்கும் அம்பர் ஹேர்ட்

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2016 | 4:49 pm

”பைரேட்ஸ் ஆப் தி கரிபியன்” திரை நட்சத்திரமான ஜானி டெப்பிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுக்கொண்ட ஹொலிவுட் நடிகை அம்பர் ஹேர்ட், ஜீவனாம்சமாகக் கிடைத்த 7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அறக்கொடைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

குழந்தைகள் மருத்துவமனை மற்றும் அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம் இரண்டிற்கும் சமமாக அத்தொகையைப் பிரித்து வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை நிறுத்தவதற்கான குறிப்பிட்ட கவனத்தோடு இந்தப் பணத்தொகை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜானி டெப் வாக்குவாதத்தின்போது தன்னை அடித்துவிட்டதாக முன்னதாக அம்பர் ஹேர்ட் குற்றம் சாட்டியிருந்தார்.

எவ்வாறாயினும், ஜானி டெப் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கிறார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்