காட்டு யானைகளின் பாதுகாப்பு நிமித்தம் ரயில்களுக்கு வேகக்கட்டுப்பாடு

காட்டு யானைகளின் பாதுகாப்பு நிமித்தம் ரயில்களுக்கு வேகக்கட்டுப்பாடு

காட்டு யானைகளின் பாதுகாப்பு நிமித்தம் ரயில்களுக்கு வேகக்கட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2016 | 8:14 am

காட்டு யானைகள் நடமாடும் பகுதிகள் ஊடாக ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும்போது வேகக் கட்டுப்பாட்டை விதிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலும், மதவாச்சியிலிருந்து கிளிநொச்சி வரையிலும் ரயில் மார்க்கங்களில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என ரயில்வே பொதுமுகாமையாளர் பி.ஏ.பீ. ஆரியரத்ன குறிப்பிட்டார்.

ரயிலில் மோதுண்டு காட்டு யானைகள் உயிரிழப்பதை தடுப்பதற்கான திட்டத்தின் கீழ், வேகக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

செட்டிக்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு 4 காட்டு யானைகள் நேற்று முன்தினம் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, வன விலங்குகள் திணைக்களத்தினருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர குறிப்பி்ட்ட ரயில் மார்க்கங்களின் வளைவுகள் அமைந்துள்ள இடங்களில் காணப்படும் காட்டுப் பகுதிகளை வெட்ட வெளியாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறினார்.

ரயில் புறப்படுவதற்கு முன்னர் காட்டு யானைகளை துரத்துவதற்கான ஒலி சமிக்ஞைகளை விலங்குகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பரீட்சித்துப் பார்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்