ஊழல் மோசடிகளுக்கு வழிவகுத்தவர்களை மீண்டும் ஆட்சிப்பீடமேற அனுமதிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

ஊழல் மோசடிகளுக்கு வழிவகுத்தவர்களை மீண்டும் ஆட்சிப்பீடமேற அனுமதிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2016 | 9:25 pm

ஊழல் மோசடிகளுக்கு வழிவகுத்தவர்களை மீண்டும் ஆட்சிப்பீடத்தில் ஏற அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணக்க அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்திலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

”புதிய நாடு, ஒரே பயணம், ஐந்து வருட முன்னோக்கிய பயணத்தில் முதல் ஆண்டு பூர்த்தி” எனும் தொனிப்பொருளில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்