உலகின் மிக நீளமான‌ எயார்லேண்டர் 10 விமானம் தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது

உலகின் மிக நீளமான‌ எயார்லேண்டர் 10 விமானம் தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது

உலகின் மிக நீளமான‌ எயார்லேண்டர் 10 விமானம் தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2016 | 11:02 am

உலகின் மிக நீளமா‌ விமானமான எயார்லேண்டர் 10 (Airlander 10) தனது முதலாவது பயணத்தை புதன் அன்று வெற்றிகரமாக தொடங்கியது. லண்டனில் இருந்து வடக்கே உள்ள பெட்ஃபோர்டில் இருந்து புறப்பட்ட விமானமானது 15 நிமிடத்தில் 2000 அடியை எட்டியது.

முன்னதாக எயார்லேண்டரின் முதல் பயணம் ஞாயிறன்று தொடங்குவதாக இருந்தது ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம் தள்ளிவைக்கப்பட்டது.

பிரிட்டனின் ஹைபிரிட் ஏர் வெஹிகிள்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானமானது ஆட்களோடு ஐந்து நாட்கள் வரையில் தொடர்ந்து பயணிக்கக்கூடியது.

ஆளில்லாத நிலையில் இரண்டு வாரங்கள் வரை தொடர்ந்து பறக்கும் வல்லமை படைத்தது மற்ற விமானங்களை விட குறைந்த அளவிலான‌ எரிபொருளை செலவிடும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் சாதாரண பயணிகள் விமானத்தை விட 50 அடி கூடுதல் நீளமுடையது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்