அரசுடைமையாக்கப்பட்ட 156.5 மில்லியன் ரூபா தமது கணக்கிலிருந்த பணம் அல்லவென CSN பணிப்பாளர் தெரிவிப்பு

அரசுடைமையாக்கப்பட்ட 156.5 மில்லியன் ரூபா தமது கணக்கிலிருந்த பணம் அல்லவென CSN பணிப்பாளர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2016 | 8:37 pm

அண்மையில் நீதிமன்ற உத்தரவிற்கமைய அரசுடைமையாக்கப்பட்ட 156.5 மில்லியன் ரூபா தமது கணக்கிலிருந்த பணம் அல்லவென CSN தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அந்தப் பணம் நிறுவனத்தின் பணிப்பாளர் அல்லது பங்காளரொருவரின் கணக்கிலிருந்த பணம் அல்லவென CSN தொலைக்காட்சியின் பணிப்பாளர் ரொஹான் வெலிவிட்ட விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிக்குற்றப் பிரிவினால் தமக்குக் கிடைத்த தகவல்களின்படி, இந்தப் பணம் வேறு நிறுவனமொன்றுக்குச் சொந்தமான கணக்கில் காணப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிதியை அரசுடைமையாக்கிய நடவடிக்கையுடன் தமது தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லையென ரொஹான் வெலிவிட்ட விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்