அமெரிக்காவில் காட்டுத் தீ உக்கிரம்

அமெரிக்காவில் காட்டுத் தீ உக்கிரம்

அமெரிக்காவில் காட்டுத் தீ உக்கிரம்

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2016 | 10:14 am

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் பர்னேடினோ பிராந்தியத்தில் கடந்த வாரம் பரவிய காட்டுத் தீ தற்போது அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பரவி வரும் காட்டுத் தீயினால் குறித்த பிரதேசத்திற்கு மின் இணைப்பை வழங்கும் உயர் அழுத்த மின் மாற்றிகளும் வெடிப்புகளுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 100 மின் கம்பங்கள் அளவில் தீயினால் சேதமடைந்துள்ளதுடன் புனித பர்னேடோ பிராந்தியத்திற்கான மின் வழங்கல் முழுமையாக தடைப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

மின் வழங்கலை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கு ஓரிரு நாட்கள் செல்லும் என தெரிவிக்கப்படுவதுடன் காட்டுத் தீயினால் 82 000 இற்கும் அண்மித்த மக்கள் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதா தெரிவிக்கப்டுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்