ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கும் என நான் நினைக்கவில்லை – பவித்ரா வன்னியாராச்சி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கும் என நான் நினைக்கவில்லை – பவித்ரா வன்னியாராச்சி

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2016 | 9:15 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சியிடம் வினவப்பட்டது.

நாமல் ராஜபக்ஸவைப் பார்ப்பதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்த போதே இதுகுறித்து வினவப்பட்டது.

இதற்கு பவித்ரா வன்னியாராச்சி பின்வருமாறு பதிலளித்தார்,

[quote]எனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுக்கும் என நான் நினைக்கவில்லை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அவ்வாறான ஒரு தேவை இருக்கும் என நான் நினைக்கவில்லை.[/quote]

புதிய பட்டியலின் படி கடந்த அரசாங்கத்தின் பிரபல உறுப்பினர்களாகத் திகழ்ந்த கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்த யாப்பா அபேவர்தன, சி.பி.ரத்நாயக்க, சரத் குமார குணரத்ன, காமினி லொகுகே, ஜகத் பாலசூரிய, ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோரின் அமைப்பாளர் பதவிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்