ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமனம்: சந்திரிக்கா கருத்து

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமனம்: சந்திரிக்கா கருத்து

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2016 | 8:15 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்களை நியமிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

[quote]நீக்க வேண்டும் என்பதனால் நீக்கியிருக்கலாம். கட்சிக்கான ஒழுக்கம் உள்ளது. கட்சிக்கென திட்டமொன்று உள்ளது. அவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து செயற்பட்ட போது மன்னிப்பு வழங்கப்பட்டதுடன் கால அவகாசமும் வழங்கப்பட்டது. எனினும், அவர்கள் மாறவில்லை. எனவே, கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின் ஒழுக்கம் அவசியமாகும்.[/quote]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் யஷூவோ யுகுடாவை இன்று சந்தித்த போதே இதனைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்