ரயிலில் மோதி 4 காட்டு யானைகள் உயிரிழப்பு

ரயிலில் மோதி 4 காட்டு யானைகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2016 | 12:48 pm

மன்னார் – கொழும்பு ரயில் மார்க்கத்தில் ரயிலில் மோதி 4 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

செட்டிக்குளம் மற்றும் மடு ரயில் மார்க்கத்தில் 257 ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் தலைமன்னார் முதல் கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலில் மோதி யானைகள் உயிரிழந்துள்ளன.

இதனால் மன்னாருக்கான ரயில் போக்குவரத்து 46 நிமிடங்கள் தாமதமடைந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் தற்போது ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்