மது போதையுடன் பயணிக்கும் பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மது போதையுடன் பயணிக்கும் பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மது போதையுடன் பயணிக்கும் பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2016 | 9:33 am

மது போதையுடன் பயணிக்கும் பஸ் சாரதிகளுக்கு எதிராக பொலிஸாருடன் இணைந்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பொலிஸ்மா அதிபருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் பஸ்களின் சாரதிகளே மதுபோதையுடன் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு மதுபோதையுடன் பயணிக்கும் பஸ் சாரதிகளை கைது செய்வதற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும் அதிகாரமுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியதாக இதன்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டார்.

இதன்பிரகாரம் மதுபோதையுடன் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் கைது செய்யப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்