பரவிப்பாஞ்சான் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர்

பரவிப்பாஞ்சான் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2016 | 9:27 pm

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை இன்று தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர்.

5 நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்த பரவிப்பாஞ்சான் மக்களின் நிலை தொடர்பில் ஆராய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அங்கு இன்று சென்றிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் ஈ. சரவணபவன் ஆகியோரும் பரவிப்பாஞ்சான் மக்களைக் காணச்சென்றிருந்தனர்.

இதன்போது, எதிர்க்கட்சித் தலைவரிடம் மக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைத்தனர்.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர், பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

இரண்டு கிழமைகளுக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவரின் வாக்குறுதி காரணமாக மக்கள் தமது தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்