பரவிபாஞ்சான் மக்கள் ஐந்தாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம்

பரவிபாஞ்சான் மக்கள் ஐந்தாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம்

பரவிபாஞ்சான் மக்கள் ஐந்தாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2016 | 1:26 pm

தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் ஐந்தாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணிகளின் விடுவிப்பு தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சு குறித்த மக்களுக்கு நேற்று (16) கடிதமொன்றை அனுப்பியிருந்தது.

எதிர்வரும் சில வாரங்களுக்குள் பூரணமாக தீர்வு பெறப்படவுள்ளதால், கவனயீர்ப்பை கைவிடுமாறு இந்த கடிதத்தினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீள்குடியேற்ற அமைச்சினால் கடிதம் வெளியிடப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள மக்கள், எவ்வளவு காலத்திற்குள் காணி விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்படாத நிலையில் தாம் தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுப்பதாக கூறியுள்ளனர்.

காணி விடுவிப்பு தொடர்பில் கால அவகாசம் வழங்கப்படும் பட்சத்தில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடவுள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்