நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2016 | 7:00 pm

தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான கந்தையா அருந்தவபாலனின் மணி விழா நிகழ்வு, யாழ். சாவகச்சேரியில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ‘அருந்தவபாலன் அறக்கட்டளை நிதியம்’ ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, ‘அருந்தவம்’ என்ற நூலும் வெளியிடப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

[quote]சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க உயர்ஸ்தானிகர் அப்துல் கேஷாப் அவர்கள் ஒரு கருத்தை எனக்குத் தெரிவித்தார். இரு இனங்களிலும் உள்ள நல்லவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து விட்டால் உங்கள் நாட்டின் பிரச்சினை தீர்ந்து விடும் என்று அவர் கூறினார். இன்று வல்லவர்களுக்குப் பஞ்சமில்லை. நல்லவர்களுக்குத் தான் பஞ்சம். நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். வல்லவர்கள் பொதுவாக சுயநலமிகள். ஆனால், நல்லவர்கள் சதா மற்றவர் பற்றி எண்ணம் கொண்டவர்கள்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்