சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட அறுவர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட அறுவர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2016 | 11:56 am

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முற்பட்ட இலங்கையைச் சேர்ந்த 6 பேர் மீண்டும் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு முயன்றதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் பீட்டர் டுட்டன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் சந்தேகநபர்கள் எந்த பகுதியில் கைது செய்யப்பட்டார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

ஆறு பேரையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த நிலையில் 17 பேர் நேற்று முன்தினம் மட்டக்களப்பிற்கு கிழக்கே உள்ள கடற்பகுதியில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்