கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் ஏற்றியிறக்கல் நடவடிக்கைகளை 30 மில்லியன் வரை அதிகரிக்க எண்ணம்

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் ஏற்றியிறக்கல் நடவடிக்கைகளை 30 மில்லியன் வரை அதிகரிக்க எண்ணம்

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் ஏற்றியிறக்கல் நடவடிக்கைகளை 30 மில்லியன் வரை அதிகரிக்க எண்ணம்

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2016 | 7:06 am

2030 ஆம் ஆண்டளவில் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் ஏற்றியிறக்கல் நடவடிக்கைகளை 30 மில்லியன் வரை அதிகரிப்பதற்கு எண்ணியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதாயின் கொழும்பு துறைமுகத்தை ஆறு மடங்கால் விஸ்தரிக்க வேண்டியுள்ளதாக அமைச்சின் செயலாளர் எல்.பி. ஜயம்பதி கூறினார்.

தெற்காசியாவில் அதியுச்ச போட்டித்தன்மை கொண்ட சமுத்திரம் சார் சேவைகளை வழங்கும் நிலையமாக இலங்கையை மாற்றுவதற்கான இலக்கின் கீழ், பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

துறைமுகங்கள் அதிகார சபையின் எதிர்கால வரவு – செலவுத்திட்ட மீளாய்வு கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்