குழிகளைத் தோண்டி நீரைத் தேடும் மனிதர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது ”மக்கள் சக்தி”

குழிகளைத் தோண்டி நீரைத் தேடும் மனிதர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது ”மக்கள் சக்தி”

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2016 | 8:57 pm

குளிர்மையான காலநிலை நிலவும் நுவரெலியா, ஹட்டன் போன்ற பிரதேசங்களில் மலைகளில் இருந்து ஊற்றெடுக்கும் செயின்ட் க்ளேயார், டெவோன் போன்ற நீர்வீழ்ச்சிகளைப் பார்த்த வண்ணமே, குழிகளைத் தோண்டி நீரைத் தேடும் மனிதர்களை நீங்கள் சந்தித்துள்ளீர்களா?

அவ்வாறானவர்களுக்கு ”மக்கள் சக்தி 100 நாட்கள்” திட்டத்தின் ஊடாகக் குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஹட்டன் – ருவன்புர கிராம மக்கள் தமது தாகத்தைத் தணிப்பதற்காக இரண்டு மைல்கள் தூரம் பயணிக்கும் அல்லது குழிகளைத் தோண்டும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

சுத்தமான நீரின்மையால் அவர்கள் பல்வேறு நோய்த் தாக்கங்களுக்குள்ளாகியுள்ளதுடன், இதன் பின்புலத்தின் கீழ் ”மக்கள் சக்தி 100 நாட்கள்” திட்டத்தின் ஊடாக இந்த மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

45 குடும்பங்களைச் சேர்ந்த 300 க்கும் அதிகமான மக்களுக்கான குடிநீர் தேவை இதன் ஊடாக பூர்த்தி செய்யப்படவுள்ளது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் தலைமையில் இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் இன்று முற்பகல் அமைந்த சுபவேளையில் நாட்டப்பட்டது.

இந்த குடிநீர்த்திட்டத்திற்கு இலங்கை பொறியியலாளர் நிறுவனம் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்