இறுதிச்சுற்றில் வேகம் குறைந்தமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார் உசைன் போல்ட்

இறுதிச்சுற்றில் வேகம் குறைந்தமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார் உசைன் போல்ட்

இறுதிச்சுற்றில் வேகம் குறைந்தமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார் உசைன் போல்ட்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2016 | 3:36 pm

ரியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 100 மீட்டர் அரையிறுதிக்கும் இறுதிச்சுற்றுக்கும் இடையில் போதிய கால அவகாசம் இல்லாமற்போனதாலேயே இறுதிச்சுற்றில் வேகமாக ஓட இயலாமற்போனது என உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இப்போட்டியில் தங்கம் வென்ற உசைன் போல்ட், இரு சுற்றுக்களுக்கும் இடையிலான நேரத்தைத் தீர்மானித்தது யாரெனத் தெரியவில்லை, இது முற்றிலும் முட்டாள்தனமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரையிறுதிச் சுற்றுக்கும் இறுதிச்சுற்றுக்கும் இடையே சுமார் 1 மணி நேரம் மாத்திரமே இடைவெளி இருந்தது.

”இரு சுற்றுக்களுக்கும் இடையே போதிய அவகாசம் இல்லாததாலேயே வீரர்களிடம் வேகம் குறைந்தது. ஒருமுறை ஓடிவிட்டு, குறுகிய இடைவெளிக்குள்ளாக மீண்டும் வேகமாக ஓடுவதென்பது இயலாத ஒன்று. இறுதிச்சுற்றுக்குப் போதிய நேரம் இல்லாததால், பயிற்சி எடுக்கும் பகுதியில் முதல் முறையாக ஜாகிங் செய்து பயின்றேன்,” என்று உசைன் போல்ட் கூறியுள்ளார்.

இப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜஸ்டின் கேட்லினும், “அரையிறுதிக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே இறுதிச்சுற்று நடத்தப்பட்டதால், முழு பலத்துடன் செயற்பட முடியாமற்போனது’ என கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் கூறுகையில், “தடகளப் போட்டிகளுக்கான நேரத்தை சர்வதேச தடகள சம்மேளனம் தான் (IAAF) நிர்ணயிக்கிறது. அவர்களின் பரிந்துரைக்கு நாங்கள் ஒப்புதல் மட்டுமே அளிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்