குற்றவியல், சிவில் சட்ட திருத்தங்களுக்கு அமைவாக கிடைத்த மக்கள் கருத்துக்களை ஆராயும் நடவடிக்கை ஆரம்பம்

குற்றவியல், சிவில் சட்ட திருத்தங்களுக்கு அமைவாக கிடைத்த மக்கள் கருத்துக்களை ஆராயும் நடவடிக்கை ஆரம்பம்

குற்றவியல், சிவில் சட்ட திருத்தங்களுக்கு அமைவாக கிடைத்த மக்கள் கருத்துக்களை ஆராயும் நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2016 | 12:10 pm

குற்றவியல் மற்றும் சிவில் சட்ட திருத்தங்களுக்கு அமைவாக கிடைக்கப்பெற்ற மக்கள் கருத்துக்களை ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டத்தரணிகளின் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் பெற்றுக் கொண்ட கருத்துக்களையும் இதற்கு அமைவாக ஆராயவுள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார்

சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களை முன்னெடுப்பதற்கான அறிக்கையொன்றினை பெறும் நோக்கில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவினால் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன

உயர் நீதிமன்ற நீதியர்சர்களான பிரியசாத் டெப் மற்றும் புவனேக அலுவஹிரா ஆகியோரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டது

குறித்த அறிக்கையினை அமைச்சரவையின் அனுமதிக்காக விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் கூறினார

அமைச்சரவையின் கொள்கை ரீதியான அனுமதி கிடைத்ததன் பின்னர் அதன் யாப்புரீதியான தன்மை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சட்டமூலமாக சமர்ப்பிக்கப்படவுள்ளது

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்