மடு மாதா ஆடித்திருவிழாவின் விண்ணேற்பு விழா வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது

மடு மாதா ஆடித்திருவிழாவின் விண்ணேற்பு விழா வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது

மடு மாதா ஆடித்திருவிழாவின் விண்ணேற்பு விழா வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2016 | 9:20 pm

சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னார் மடு மாதா ஆடித்திருவிழாவின் விண்ணேற்பு விழா வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது.

மடு மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஆறாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று மடு தேவ மாதாவின் விண்ணேற்புத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

மடு மாதா அன்னைக்கு, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, கண்டி. மறை மாவட்ட ஆயர் வியன்னி பெனாண்டோ, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க, அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபட் அந்ராடி ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் நிறைவடைந்தது.

விண்ணேற்புத் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிரும் பெருந்திரளான பக்தர்கள் வருகைதந்திருந்தனர்.

திருவிழா இறுதியில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மடு திருத்தலத்திற்கு அன்பளிப்பு தொகையினை வழங்கி வைத்தார்.

அத்துடன், மன்னார் மாந்தை ஆலய காணிக்கான உறுதிப்பத்திரத்தை அமைச்சர் ஜோன் அமரதூங்க, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகையிடம் வழங்கி வைத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்