யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பொலன்னறுவை, சிகிரியாவிற்கு கண்காணிப்பு விஜயம்

யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பொலன்னறுவை, சிகிரியாவிற்கு கண்காணிப்பு விஜயம்

யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பொலன்னறுவை, சிகிரியாவிற்கு கண்காணிப்பு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2016 | 1:41 pm

நாட்டிற்கு வருகை தந்துள்ள யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Irina Bokova பொலன்னறுவை மற்றும் சீகிரியாவிற்கு இன்று கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.

அங்குள்ள மாணவர்களின் கேள்விகளுக்கு இதன்போது அவர் பதிலளிக்கவுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரஷாந்த குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவை சிவன் கோவில், கல் விகாரை மற்றும் நூதனசாலை என்பனவற்றை யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பார்வையிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சீகிரியாவிற்கு செல்லவுள்ள Irina Bokova சிகிரியா நூதனசாலையையும் பார்வையிடவுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்