பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் காணாமற்போன அம்மன் சிலையுடன் மூவர் கைது

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் காணாமற்போன அம்மன் சிலையுடன் மூவர் கைது

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் காணாமற்போன அம்மன் சிலையுடன் மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2016 | 3:37 pm

பொகவந்தலாவை லோய்னோன் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் காணாமற்போன அம்மன் சிலையுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நாளை (15) ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

லோய்னோன் தோட்ட ஆலயத்திலிருந்த மூன்று அடி உயரமான முத்துமாரியம்மன் சிலை கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி திருடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை அடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளை அடுத்து பலாங்கொட தெதனகல பகுதியில் திருடப்பட்ட அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்