பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2016 | 12:39 pm

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் காலமானார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அவர் இன்று காலமானார், சீமானின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான நா. முத்துக்குமார் 1500 இற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

தங்க மீன்கள் மற்றும் சைவம் படத்தில் அவர் எழுதிய பாடல்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. சைவம் படத்தில் இடம்பெற்ற அழகு… அழகு… பாடலுக்கும், தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலுக்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றவர் தமிழக அரசு விருதையும் வாங்கியுள்ளார்.

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 1975 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர்.

இயக்குனராக வேண்டும் என்று தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அவர், சிறந்த பாடலாசிரியர் ஆனார். அவருடைய இறப்பு திரையுலகம் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துக்குமார் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகள், புத்தகங்களையும் எழுதியுள்ளார். நா. முத்துக்குமார் இறப்பிற்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்