பிரதமருக்கும் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

பிரதமருக்கும் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

பிரதமருக்கும் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2016 | 11:00 am

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளை இன்று (14) சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளதாக சீனாவிலுள்ள நியூஸ்பெஸ்ட் செயலணியின் உத்தியோகஸ்தர் சுகத் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர், அந்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளை நேற்று மாலை கண்காணித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சீன பாசிசவாதத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்ததாக கருதப்படும், ஸ்ட்ப்வெல் அருங்காட்சியகம் மற்றும் சீனாவின் முதலாவது பிரதமரான ஜூ என்லாயின் வீடு மற்றும் அலுவலக வளாகத்தையும் தூதுக்குழுவினர் கண்காணித்துள்ளனர்.

சீனாவின் சோஜிங் நகரின் நகர மேயர் ஹூஅங் ஜிவான் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பொன்றும் நேற்று மாலை இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.

வீடமைப்பு மற்றும் சொத்து வலயமாக கட்டியெழுப்பப்படவிருந்த கொழும்பு துறைமுக நகரை, நிதி நகரமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதை ஹூஅங் ஜிவான் வரவேற்றதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்