பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர்ந்தும் கவனயீர்ப்புப் போராட்டம்

பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர்ந்தும் கவனயீர்ப்புப் போராட்டம்

பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர்ந்தும் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2016 | 3:26 pm

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் இரண்டாவது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்கு முன்பாக இரவு பகலாக இந்த தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியிலுள்ள தமது காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றுமாறு பரவிபாஞ்சான் கிராம மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

மூன்று தலைமுறைகளாக வாழ்ந்த தமது பூர்வீக காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் கோரிக்கை தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார்.

வெகு விரைவில் பரவிப்பாஞ்சான் கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்