தனமன்வில பகுதியில் காட்டு யானை தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

தனமன்வில பகுதியில் காட்டு யானை தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

தனமன்வில பகுதியில் காட்டு யானை தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2016 | 3:47 pm

ஹம்பாந்தோட்டை தனமன்வில பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு குறித்த நபர் வீட்டிலிருந்து தனது தென்னை தோட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது யா​னை தாக்கியுள்ளது.

40 வயதான தனமன்வில பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரதேச பரிசோதனைக்காக தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை விட தற்போது இந்த பிரதேசத்தில் யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் அதிக உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்