சிறுவர்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவது தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்க தீர்மானம்

சிறுவர்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவது தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்க தீர்மானம்

சிறுவர்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவது தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2016 | 9:15 am

சிறுவர்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவது தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கைகள் தென் மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

தென் மாகாணத்திலேயே அதிகமான சிறுவர் பாலியல் தொழிலாளர்கள் தொடர்பில் தகவல்கள் ​வெளியாகியுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக காலி ஹிக்கடுவ மற்றும் உனவட்டுன ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் சிறுவர்கள் மற்றும் அவர்களை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் உல்லாச விடுதிகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை அடுத்து சிறுவர் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் திட்டமிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவர் பாலியல் தொழிலாளர்களை தேடி வெளிநாட்டவர்கள் அதிகமானோர் நாட்டிற்கு வருகை தருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் சிலர் சிறுமிகளை தேடி நாட்டிற்கு வருகை தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் நாட்டிலுள்ள சிறார்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்