மக்கள் சக்தி திட்டத்தால் தம்பலகாமம் நூலகம் புனர்நிர்மாணம்: நூல்களும் வழங்கப்பட்டன

மக்கள் சக்தி திட்டத்தால் தம்பலகாமம் நூலகம் புனர்நிர்மாணம்: நூல்களும் வழங்கப்பட்டன

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2016 | 9:02 pm

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் ”மக்கள் சக்தி 100 நாட்கள்” திட்டம் இன்று இருவேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டது.

புத்தகக்குறைபாடு, கட்டடம் சீரின்மை போன்ற பிரச்சினைகளுடன் இயங்கிய தம்பலகாமம் நூலகம் மக்கள் சக்தி திட்டத்தினூடாக இனங்காணப்பட்டது.

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட தம்பலகாமம் பொது நூலகத்தின் புனர்நிர்மாணப் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நூலக புனர்நிர்மாணப் பணிக்கான அங்குரார்ப்பன நிகழ்வில், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் நீட்ரா வீரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

நூல்களும் நூல்களைப் பாதுகாப்பதற்கான அலுமாரிகளும் புனரமைப்பதற்கான பொருட்களும் இதன்போது வழங்கப்பட்டன.

தம்பலகாமம் பொது நூலகத்தினூடாக 500க்கும் மேற்பட்ட வாசகர்கள் நன்மையடையவுள்ளனர்.

இதேவேளை, நியூஸ்பெஸ்ட் – மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் கீழ் ஹம்பேகமுவ, வட்டமட பலநோக்கு மண்டபத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் கீழ் தனமல்வில பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஐந்தாவது செயற்றிட்டம் இதுவாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்