புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக புனரமைப்பு நிதி மோசடி: மேலுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக புனரமைப்பு நிதி மோசடி: மேலுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக புனரமைப்பு நிதி மோசடி: மேலுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2016 | 8:17 am

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக புனரமைப்பின்போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமோசடி தொடர்பில், மேலுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக கணக்காய்வாளர், பொலிஸ் தலைமையக விசேட விசாரணைப் பிரிவினால் நேற்று (12) கைது செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக புனமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட பணத்திற்கு பொருத்தமான பணிகள் இடம்பெறவில்லை எனக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்