பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா விஜயம்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2016 | 8:06 am

ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (13) சீனாவுக்கு பயணமானார்.

தென் கிழக்கு சீனாவில் கைத்தொழில் பேட்டை, கொள்கலன் களஞ்சிய தொகுதி, தொழில்நுட்ப பூங்கா, நிதி கேந்திர நிலையம், புத்துருவாக்க உற்பத்தி நிறுவனம் ஆகியன அமைந்துள்ள இடங்களுக்கு பிரதமர் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் பிரதமரின் சீன விஜயத்தில் இணைந்துள்ளனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்