பரவிப்பாஞ்சானில் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்

பரவிப்பாஞ்சானில் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2016 | 7:29 pm

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் இன்று தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று காலை தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மூன்று தலைமுறைகளாகத் தாம் வாழ்ந்த தமது பூர்வீகக் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்