பசிலைக் கைது செய்ய ஆயிரம் விடயங்கள் உள்ளன; தற்போது வாலையே பிடித்துள்ளனர் – எஸ்.பி.திசாநாயக்க

பசிலைக் கைது செய்ய ஆயிரம் விடயங்கள் உள்ளன; தற்போது வாலையே பிடித்துள்ளனர் – எஸ்.பி.திசாநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2016 | 8:20 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும், இந்த சந்திப்பை ஔிப்பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

சந்திப்பின் பின்னரே கட்சியின் பிரநிதிகள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.திசாநாயக்க பின்வருமாறு தெரிவித்தார்,

[quote]பசிலைக் கைது செய்வதற்கு ஆயிரம் விடயங்கள் உள்ளன. தற்போது வாலையே பிடித்துள்ளனர். அதிலிருந்து பசில் விடுதலையாவார் என்றே கூறியிருந்தேன். பசிலைக் கைது செய்ய வேண்டிய விடயத்தில் கைது செய்யவில்லை. கடுவெலயிலுள்ள 15 ஏக்கர் காணியில் மாளிகையொன்றை பசில் நிர்மாணித்து வருகின்றார். எனினும், அது அவருடையது இல்லை என்று கூறுகின்றார். அதற்கான நிதியையும் செலவிட்டுள்ளார். மாத்தறை தெற்கு பகுதியிலுள்ள 5 ஏக்கர் காணியிலும் மாளிகையொன்றுள்ளது. அதுவும் அவருடையது இல்லை என கூறுகின்றார். கம்பஹாவில் அவர் நிர்மாணித்த அலுவலகத்தை அவருடையது இல்லை என கூறுகின்றார். இவை பாரிய விடயங்களாகும்[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்