நல்லிணக்க செயற்பாடுகளுக்கான நகர்வுகளை இலங்கை மேற்கொண்டுள்ளதாக நிஷா பிஸ்வால் தெரிவிப்பு

நல்லிணக்க செயற்பாடுகளுக்கான நகர்வுகளை இலங்கை மேற்கொண்டுள்ளதாக நிஷா பிஸ்வால் தெரிவிப்பு

நல்லிணக்க செயற்பாடுகளுக்கான நகர்வுகளை இலங்கை மேற்கொண்டுள்ளதாக நிஷா பிஸ்வால் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2016 | 10:03 am

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டமை இலங்கையின் முன்னோக்கிய பயணத்திற்கான பாரிய நகர்வாகும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிஷா பிஸ்வால் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் வலைதளத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் உண்மையைக் கண்டறிதல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான நகர்வுகளை இலங்கை மேற்கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டமை வரலாற்று ரீதியான ஒரு மைல்கல்லாகும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப், நிஷா பிஸ்வாலின் ட்விட்டர் கருத்துக்கு பதில் கருத்தினை பதிவுசெய்துள்ளார்.

nisha twitt

அத்துடன் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்கான முன்னோக்கிய பயணத்தையும் இந்த நகர்வு அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளதென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்