கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் 

கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் 

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2016 | 5:42 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்குமா, என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

காங்கேயன் ஓடையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆரையம்பதி பிரதேச சபை பிரிவின் காங்கேயன் ஓடை பகுதியில் மாகாண சபை அமைச்சின் 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிலான வீதி அபிவிருத்திப் பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்துகொண்டார்.

இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்ததாவது,

[quote]இனவாதத்தை முற்றுமுழுதாக அழித்துவிடுவதற்கான முழு முயற்சிகளையும் இன்று எடுத்து வருகின்றோம். பல வெற்றிகளைக் கண்டிருக்கின்றோம். அரசியல் தலைமைகளுக்குள் இன ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் சேர்ந்து ஒரு ஆட்சியை அமைக்குமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது மாத்திரமல்ல அதனை நல்ல முறையில் சிறப்பான ஆட்சியாக எந்தவித பாகுபாடுமின்றி திறந்த மனதுடன் எல்லாவற்றையும் பேசித்தீர்க்கின்ற அரசியல் மாற்றத்தை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். முஸ்லிம்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான காய்களை நாங்கள் நகர்த்தி வருகின்றோம்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்