துபாயில் இலங்கை பணியாளர்கள் சிலரினால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது

துபாயில் இலங்கை பணியாளர்கள் சிலரினால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது

துபாயில் இலங்கை பணியாளர்கள் சிலரினால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2016 | 9:02 am

இலங்கைப் பணியாளர்கள் 34 பேர் துபாய், சத்வா நகரில் ஆரம்பித்திருந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

தாம் பணிபுரிந்த நிறுவனத்தினால் சம்பளம் மற்றும் உரிய வசதிகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த இரண்டு மாதங்களாக சத்வா நகரிலுள்ள பஸ் தரிப்பிடமொன்றில் கூடி, இலங்கைப் பணியாளர்கள் கவனயீர்ப்பு நடவடிக்யை முன்னனெடுத்திருந்தனர்.

துபாயின் சத்வா நகரிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் சுத்திகரிப்பு ஊழியர்களாக ஐந்து மாதங்களுக்கு முன்னர் இவர்கள் தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தனர்.

எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இலங்கைப் பணியாளர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் எதுவுமின்றி மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியிருந்தமை குறித்து நியூஸ்பெஸ்ட் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கமைய தாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதன் காரணமாக, தங்களின் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக துபாயில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களில் ஒருவர் நியூஸ்பெஸ்டுக்கு கூறினார்.

தங்களின் பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரும் பொருட்டு நியூஸ்பெஸ்ட் வழங்கிய பங்களிப்பிற்கும் இலங்கைப் பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்