சீனாவில் 590 அடி உயரத்தில் அந்தரத்தில் மிதந்தபடி நடைபெற்ற திருமணம் (PHOTOS)

சீனாவில் 590 அடி உயரத்தில் அந்தரத்தில் மிதந்தபடி நடைபெற்ற திருமணம் (PHOTOS)

சீனாவில் 590 அடி உயரத்தில் அந்தரத்தில் மிதந்தபடி நடைபெற்ற திருமணம் (PHOTOS)

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2016 | 7:37 am

சீனாவில் ஷினிழுகாய் (Shiniuzhai) தேசிய பூங்காவில் இளம் ஜோடி ஒன்று அங்குள்ள கண்ணாடி பாலத்தின் அடியில் அந்தரத்தில் தொங்கியபடி திருமணம் செய்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாடின்படி, சீனாவின் ஷினிழுகாய் (Shiniuzhai) தேசிய பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி பாலத்தின் அடியில் திருமணம் நடந்தது.

நிலத்தில் இருந்து 590 அடி உயரத்தில், அந்தரத்தில் மிதந்தபடி இந்த நிகழ்வு நடந்துள்ளது. துணிவு மிகுந்த அந்த மணமகன் முதலில் தகுந்த ஏற்பாடுடன் கீழே தொங்கவிடப்பட்டிருந்த சிவப்பு நிற மேடை ஒன்றில் இறங்கி, பின்னர் தமது வருங்கால மனைவியையும் அதில் இறங்க வைத்து, அந்த மிதக்கும் மேடையில் மோதிரம் மாற்றியுள்ளனர்.

சிவப்பு உடையில் மணமகனும் பாரம்பரியமான நீண்ட வெள்ளை உடையில் மணமளும் அந்த மிதக்கும் மேடையில் அமர்ந்தபடி மோதிரம் மாற்றிக்கொண்டது, அங்கிருந்த சுற்றுலாப்பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது மட்டுமின்றி, பயம் கலந்த உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் முகத்தில் மாறாத புன்னகையுடம் மணமக்கள் இருவரும் அந்த நிகழ்வு முடியும்வரை புகைப்படத்திற்கு போஸ் அளித்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர், இதுபோன்ற 5 ஜோடிகள் இந்த பாலத்தின் மத்தியில் நின்றபடி தங்கள் திருமண வாக்குறுதியை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

_90742433_down

_90742435_down-1

_90742437_9_330407630_1

_90742439_9_330407910_1

_90742781_9_327667560_1

_90742783_9_327667670_1

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்