சீனாவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் பலி

சீனாவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் பலி

சீனாவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2016 | 5:09 pm

சீனாவின் ஜிபோ நகரில் வாகனங்கள் பல அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இரண்டு பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

அதிகப் பாரம் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று சாலையை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து பஸ்கள் மீது மோதியுள்ளது.

பஸ்ஸின் பின்னால் வந்த வாகனங்களும் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதியுள்ளன.

விபத்தில் காயமடைந்த இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்