காணாமற்போனோர் தொடர்பில் நிரந்த தீர்வினை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம் – சந்திரிக்கா

காணாமற்போனோர் தொடர்பில் நிரந்த தீர்வினை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம் – சந்திரிக்கா

காணாமற்போனோர் தொடர்பில் நிரந்த தீர்வினை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம் – சந்திரிக்கா

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2016 | 7:59 am

காணாமற்போனோர் தொடர்பில் நிரந்த தீர்வினை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – பூநகரி மக்களுக்கான மழைநீர் சேகரிப்புத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காக பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் பொருட்டு பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.

இதன் போது முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த கருத்து..
மரணித்தார்கள் என அறிந்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியும். கடந்த அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லை . தற்போதைய அரசாங்கம் அதற்காக நிரந்தர தீர்வினை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. அதன் முதற் காட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்திய துணைத்தூதுவர் ஏ. நடராஜான், வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்