எமது அரசாங்கம் மிகவும் பலம்வாய்ந்தது: விசேட நேர்முகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு

எமது அரசாங்கம் மிகவும் பலம்வாய்ந்தது: விசேட நேர்முகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2016 | 8:10 pm

விசேட நேர்முகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கலந்துகொண்டிருந்தார்.

ஊடகவியலாளர் ஷான் விஜேதுங்க இந்த நேர்காணலை நடத்தியதுடன், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்ததாவது,

[quote]அரசாங்கத்தின் செயல்முறை இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் புதிய அனுபவமாகும். பொதுமக்களுக்கும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் எமக்கும் நாட்டிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இந்த அரசாங்கம் புதியதொரு அனுபவமாகும். எமது அரசாங்கம் மிகவும் பலம்வாய்ந்ததாகும். ஜனாதிபதி என்ற ரீதியில் சுமார் 62 இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் எனக்கு கிடைத்தன. பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை எமக்குள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கடந்த கால அறிக்கைகளிலும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை காணப்படுகின்ற பட்சத்தில், முன்னெடுக்கக்கூடிய சில விடயங்களை ஏன் தாமதப்படுத்துகின்றீர்கள் என கேட்கப்பட்டிருந்தது. நாம் பலம்வாய்ந்த அரசாங்கம் என்பதையும் எம்மை அசைக்க முடியாது என்பதையும் பல விடயங்களின் ஊடாக எமக்கு தெளிவாக உணர்த்த முடியும்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்