உயர்தரப் பரீட்சை மோசடிகள் தொடர்பில் 48 முறைப்பாடுகள்

உயர்தரப் பரீட்சை மோசடிகள் தொடர்பில் 48 முறைப்பாடுகள்

உயர்தரப் பரீட்சை மோசடிகள் தொடர்பில் 48 முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2016 | 2:05 pm

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மோசடிகள் தொடர்பில் 48 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மற்றுமொரு பரீட்சார்த்தியின் விடைத்தாளை திருட்டுத்தனமாக பார்த்து எழுதுவதற்கு முயற்சித்தமை தொடர்பிலேயே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

பரீட்சை மோசடிகள் தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நாடளாவிய ரீதியிலான கண்காணிப்புக் குழுக்களை நியமித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.

உயர்தரப் பரீட்சையில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டமைக்காக பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்