அமெரிக்க நீச்சல் சாம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

அமெரிக்க நீச்சல் சாம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2016 | 12:52 pm

அமெரிக்க நீச்சல் சாம்பியனான மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் விழாவில் 100 மீற்றர் Butterfly பிரிவில் 2 ஆம் இடத்தை அடைந்த நிலையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இந்தப் போட்டியில் சிங்கப்பூரின் 21 வயதுடைய வீரரான ஜோசப் ஸ்கூலின் வெற்றி பெற்றார்.

மைக்கல் பெல்ப்ஸ் 2008 ஆம் ஆண்டு ஜோசப் ஸ்கூலினை சந்தித்துள்ளார்.

அதன் பின் எட்டு வருடங்கள் கடந்த நிலையில் ஸ்கூலின், ஒலிம்பிக் போட்டியின் போது பெல்ப்ஸை வெற்றி கொண்டுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றில் 22 தங்கம் அடங்கலாக 27 பதக்கங்களை பெல்ப்ஸ் சுவீகரித்துள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்