பிரதமர் நாளை சீனா பயணம்

பிரதமர் நாளை சீனா பயணம்

பிரதமர் நாளை சீனா பயணம்

எழுத்தாளர் Bella Dalima

12 Aug, 2016 | 6:03 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை (13) சீனாவிற்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

ஐந்து நாட்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் சீனாவுக்கு பயணமாகவுள்ளார்.

தென்கிழக்கு சீனாவில் கைத்தொழிற்பேட்டை, கொள்கலன் களஞ்சியம், தொழில்நுட்ப பூங்கா, நிதி மத்திய நிலையம், புத்தாக்க உற்பத்தி நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களை இதன்போது பிரதமர் கண்காணிக்கவுள்ளார்.

அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சம்பிக்க ரணவக்க ஆகியோர் உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் பிரதமரின் சீன விஜயத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்