ஜனாதிபதி மற்றும் நோர்வே பிரதமருக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் நோர்வே பிரதமருக்கு இடையில் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2016 | 1:23 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) நடைபெற்றது.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சொல்பேர்க் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ,நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்களின் வருடாந்த பொது சபைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பாலித மஹிபால உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்