கொழும்பில் 1,158 அனுமதியற்ற நடைபாதை வியாபாரிகள்; அகற்றுமாறு அமைச்சர் பணிப்புரை

கொழும்பில் 1,158 அனுமதியற்ற நடைபாதை வியாபாரிகள்; அகற்றுமாறு அமைச்சர் பணிப்புரை

கொழும்பில் 1,158 அனுமதியற்ற நடைபாதை வியாபாரிகள்; அகற்றுமாறு அமைச்சர் பணிப்புரை

எழுத்தாளர் Bella Dalima

12 Aug, 2016 | 5:51 pm

கொழும்பில் 1,158 அனுமதியற்ற நடைபாதை வியாபாரிகள் இருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அனுமதி பெறாத வியாபாரிகளில் 720 பேர் கொழும்பு நகர எல்லைப் பகுதிகளில் இருப்பதுடன், 699 பேர் புறக்கோட்டை பகுதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 120 நடமாடும் விற்பனை நிலையங்கள் நடைபாதைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனுமதியற்ற வியாபாரிகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்