16 ஆண்டுகால உண்ணாவிரதத்தைக் கைவிட்ட இரும்புப் பெண்மணி இரோம்: முதல்வராக விருப்பம்

16 ஆண்டுகால உண்ணாவிரதத்தைக் கைவிட்ட இரும்புப் பெண்மணி இரோம்: முதல்வராக விருப்பம்

16 ஆண்டுகால உண்ணாவிரதத்தைக் கைவிட்ட இரும்புப் பெண்மணி இரோம்: முதல்வராக விருப்பம்

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 4:59 pm

இந்தியாவின் மணிப்பூரில் 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்த, இருப்புப் பெண்மணி இரோம் சானு ஷர்மிளா நேற்று (09) சிறையிலிருந்து விடுதலையானார்.

44 வயதாகும் இரோம் சானு ஷர்மிளா, மணிப்பூரில் நக்சல்களை ஒடுக்க ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்ட சட்டத்தினை எதிர்த்து 2000 ஆம் ஆண்டு முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குவதால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி, அதனை நீக்குமாறு வலியுறுத்தியே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

இதனால், அவர் தற்கொலை செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், சிறையிலும் உணவைத் தவிர்த்து வந்தார் ஷர்மிளா. அவருக்கு மூக்கு வழியாக வலுக்கட்டாயமாக திரவ உணவு வழங்கப்பட்டு வந்தது.

தற்போது விடுதலையாகியுள்ள அவர், மணிப்பூரின் முதல்வராக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நேற்று விடுதலையான ஷர்மிளாவை நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் சந்தித்த போது, தான் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாகவும் வேறு வழியில் தனது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் குரால் தொகுதியில் இருந்து சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்