வித்யா கொலை வழக்கு; சந்தேகநபர்களின் விளக்கமறியல் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு

வித்யா கொலை வழக்கு; சந்தேகநபர்களின் விளக்கமறியல் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு

வித்யா கொலை வழக்கு; சந்தேகநபர்களின் விளக்கமறியல் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2016 | 1:43 pm

யாழ் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் ஒன்பது பேரையும் ​மேலும் மூன்று மாத காலம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் 9 சந்நேபர்களின் ஒரு வருடத்திற்கான விளக்கமறியல் கடந்த மே மாதம் 11 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததை அடுத்து சட்டமா அதிபரால் யாழ் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசேட மனுவிற்கமைவாக ஏற்கனவே இந்த வழக்கு மூன்று காலத்திற்கு நீடிக்கப்பட்டிருந்தது.

குறித்த மூன்று மாத காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் சந்தேகநபர்கள் இன்று மீண்டும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நிறைவு பெற்று வழக்கு கோவை பரிசீலனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்ககளுக்கு பிணை வழங்குவது வழக்கிற்கு பாதகமாக அமையும் எனவும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகநபர்களின் விளக்கமறியலை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீடிக்குமாறு கோரி சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜனாப சக்கி இஸ்மாயில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 9 பேருக்கான விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

இதன்பிரகாரம் சந்நேகநபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வழக்கின் 4 ஆம், 7 ஆம் மற்றும் 9 இலக்க சந்தேநபர்களை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரப்பட்ட மனுவும் இன்று நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்