ரியோ டி ஜெனீரோ நகரில் வௌிநாட்டு பத்திரிகையாளர்களுடன் பயணித்த பஸ் மீது தாக்குதல்

ரியோ டி ஜெனீரோ நகரில் வௌிநாட்டு பத்திரிகையாளர்களுடன் பயணித்த பஸ் மீது தாக்குதல்

ரியோ டி ஜெனீரோ நகரில் வௌிநாட்டு பத்திரிகையாளர்களுடன் பயணித்த பஸ் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2016 | 12:01 pm

ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடன் பயணித்த பஸ் மீது சில நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அந்த பஸ்ஸின் இரு கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொருங்கின.

இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்களுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த பஸ்ஸின்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா?, அல்லது, கல்வீச்சு சம்பவத்தில் பஸ் சேதமடைந்ததா? என்பது தொடர்பாக பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி ஜெனீரோ நகரில் ஏற்கனவே பாதுகாப்பு படைகளை சேர்ந்த சுமார் 85,000 பேர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்